Wednesday, May 14, 2008

காற்றின் மொழி, ஒலியா இசையா

திரைப்படம்: மொழி
பாடியவர்: பலராம்


காற்றின் மொழி, ஒலியா இசையா
பூவின் மொழி, நிறமா மணமா
கடலின் மொழி, அலையா நுரையா
காதல் மொழி, விழியா இதழா

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதற்கு மொழியே தேவையில்லை

காற்றின் மொழி, ஒலியா இசையா
பூவின் மொழி, நிறமா மணமா

காற்று வீசும்போது திசைகள் கிடையாது
காதல் பேசும்போது மொழிகள் கிடையாது
பேசும் வார்த்தை போல மெளனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது

உலவித் திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதற்கு மொழியே தேவையில்லை

காற்றின் மொழி ...

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமை ஆனால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமை ஆனால் நாணம் மொழியாகும்

ஓசை தூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவு கூட மொழியாகும்

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதற்கு மொழியே தேவையில்லை

காற்றின் மொழி, ஒலியா இசையா
பூவின் மொழி, நிறமா மணமா
கடலின் மொழி, அலையா நுரையா
காதல் மொழி, விழியா இதழா

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதற்கு மொழியே தேவையில்லை

காற்றின் மொழி ...

உலகம்...அழகு கலைகளின் சுரங்கம்

திரைப்படம்: உலகம் சுற்றும் வாலிபன்
பாடியவர்:

உலகம்
அழகு கலைகளின் சுரங்கம்
பருவச்சிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா
உலகம்
அழகு கலைகளின் சுரங்கம்
பருவச்சிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா
காலமே ஓடிவா காதலே தேடிவா

பூமியெங்கும் பூமேடை
பொங்கிப்பாயும் நீரோடை
மேகம் போடும் மேலாடை
மின்னல் வந்தால் பொன்னாடை

மாந்தளிர் மேனியில் மழை வேண்டும்
இள மாலையில் நான் அதைத் தரவேண்டும்
மாந்தளிர் மேனியில் மழை வேண்டும்
இள மாலையில் நான் அதைத் தரவேண்டும்
காலமே ஓடிவா காதலே தேடிவா

உலகம்
அழகு கலைகளின் சுரங்கம்
பருவச்சிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா

இன்ப ஏக்கம் கொள்ளாமல்
எந்த நெஞ்சும் இங்கில்லை
இந்த எண்ணம் இல்லாமல்
எந்த நாடும் இன்றில்லை

உள்ள மட்டும் அள்ளிகொள்ளும் மனம் வேண்டும்
அது சொல்லும் வண்ணம் துள்ளிச்செல்லும் உடல் வேண்டும்
உள்ள மட்டும் அள்ளிகொள்ளும் மனம் வேண்டும்
அது சொல்லும் வண்ணம் துள்ளிச்செல்லும் உடல் வேண்டும்
காலமே ஓடிவா காதலே தேடிவா

உலகம்
அழகு கலைகளின் சுரங்கம்
பருவச்சிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா

பாடும் போது நான் தென்றல் காற்று

திரைப்படம்:
பாடியவர்:

பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று - 2
நான் வரும் போது ஆயிரம் பாடல் பாடவந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று

மெல்லிய பூங்கொடி வளைத்து,
மலர் மேனியைக்கொஞ்சம் அணைத்து -2
இதழில் தேனைக் குடித்து,
ஒரு இன்ப நாடகம் நடித்து -2
எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே

பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று

எல்லைகள் இல்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும் -2
புதுமை உலகம் மலரும்,
நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும் -2
யாரும் வாழப் பாடும் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே

பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று

ஜனனி ஜனனி

திரைப்படம்:
பாடியவர்: இசைஞானி இளையராசா

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ

ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் விடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே

ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும்பூங் கழலே மலை மாமகளே

அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
பணிந்தேத் துவதுன் மணி நேத்திரங்கள்

சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ

சோளம் வெதைக்கையிலே

திரைப்படம்: 16 வயதினிலே
பாடியவர்: இசைஞானி இளையராசா

சோளம் வெதைக்கையிலே சொல்லிப்புட்டு போன புள்ள
சோளம் வெளைஞ்சு காத்துகிடக்கு சோடிக்கிளி இங்கே இருக்கு
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி

மானே எம்மல்லிகையே மருத மரிக்கொழுந்தே
தேனே தினைக்கருதே திருநாளு தேரழகே
உன்ன நினைக்கையிலே என்ன மறந்தேனடி
பொன்னே பொன்மயிலே எண்ணந் தவிக்குதடி

(சோளம் வெதைக்கையிலே)

மாரியம்மன் கோயிலிலே மாறாம கைப்பிடிக்க
நாளும் ஒண்ணு பாத்துவந்தேன் நல்ல நேரம் கேட்டுவந்தேன்
அம்மன் மனசிருந்தா அருள் வந்து சேருமடி
கண்ணே கருங்குயிலே நல்லகாலம் பொறந்ததடி

(சோளம் வெதைக்கையிலே)

அம்மன் கோயில் கிழக்காலே...

திரைப்படம்: சகலகலா வல்லவன்
பாடியவர்: இசைஞானி இளையராசா

அம்மன் கோயில் கிழக்காலே... அன்ன வயல் மேற்காலே...
அம்மன் கோயில் கிழக்காலே, அன்ன வயல் மேற்காலே,
நம்ம ஊரு நடுவாலே நிக்குதடி
நாட்டு சனம் நம்ம கண்டு சொக்குதடி

அம்மன் கோயில் கிழக்காலே, அன்ன வயல் மேற்காலே,
நம்ம ஊரு நடுவாலே நிக்குதடி அடியே
நாட்டு சனம் நம்ம கண்டு சொக்குதடி

அம்மன் கோயில் கிழக்காலே...

தூக்கணாங்குருவி எல்லாம், தான்றிஞ்ச பாசையிலே
தூக்கணாங்குருவி எல்லாம், தான்றிஞ்ச பாசையிலே
மூக்கோடு மூக்கு வச்சி முணுமுணுன்னு பேசையிலே
மூக்கோடு மூக்கு வச்சி முணுமுணுன்னு பேசையிலே
மடைய தொறந்துவிட்டா மழத்தண்ணி நிறைஞ்சுவரும்
மடைய தொறந்துவிட்டா மழத்தண்ணி நிறைஞ்சுவரும்
மானம் பார்த்திருக்கும் மஞ்சக்காணி வெளைஞ்சிவரும்

அம்மன் கோயில் கிழக்காலே, அன்ன வயல் மேற்காலே,
நம்ம ஊரு நடுவாலே நிக்குதடி அடியே
நாட்டு சனம் நம்ம கண்டு சொக்குதடி

அங்காள அம்மனுக்கு ஆடியில பொங்க வச்சா
அங்காள அம்மனுக்கு ஆடியில பொங்க வச்சா
ஆயிரம் பாட்டுக்கவ அடியெடுத்து கொடுப்பாளே
ஆயிரம் பாட்டுக்கவ அடியெடுத்து கொடுப்பாளே
சிங்கார அம்மனுக்கு சித்திரையில் வடம் புடிச்சா
சிங்கார அம்மனுக்கு சித்திரையில் வடம் புடிச்சா
சங்கீதம் படிக்கச்சொல்லி சாரீரம் கொடுப்பாளே
சங்கீதம் படிக்கச்சொல்லி சாரீரம் கொடுப்பாளே

அம்மன் கோயில் கிழக்காலே, அன்ன வயல் மேற்காலே,
நம்ம ஊரு நடுவாலே நிக்குதடி அடியே
நாட்டு சனம் நம்ம கண்டு சொக்குதடி
நாட்டு சனம் நம்ம கண்டு சொக்குதடி.

நல்வரவு!

இந்த வலைப்பூவின் நோக்கம், நல்ல தமிழ்த்திரையிசைப் பாடல்களை முடிந்தவரை சொற்பிழையின்றி அளிப்பதே.